தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. எனவே நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மே-10 முதல் ஊரடங்கை அமல்படுத்தி இருந்தது. இந்த ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீடித்து தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கை பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் நேமம் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையத்தை முதல்வர் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மேலும் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தேவைப்பட்டால் முழு ஊரடங்கு கட்டாயமாக நீட்டிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் குழுவுடன் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்