Categories
உலக செய்திகள்

“தேவைப்பட்டால் மூன்று மணி நேரம் மின்தடை”…ESO பொது மக்களுக்கு எச்சரிக்கை..!!!!!

ரஷ்யாவின் ராணுவ நெருக்கடியை தொடர்ந்து சமீபத்திய காலத்தில் பிரித்தானியாவில் எரிவாயு நெருக்கடி அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் குளிர் காலத்தில் வெப்பத்திற்கு முன்னுரிமை வழங்கும் விதமாக எரிவாயு மற்றும் மின்சாரத்தில் பற்றாக்குறை ஏற்பட்டால் பிரித்தானியாவின் சில பகுதிகளில் 3 மணி நேரம் மின்வெட்டுகள் செயல்படுத்தப்படும் என நேஷனல் கிரிட் பி எல் சி யின் மின்சார அமைப்பு ஆப்பரேட்டர் வியாழக்கிழமை அன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இந்த மூன்று மணி நேர மின்வெட்டுகளில் பாதிக்கப்படும் நுகர்வோர்களுக்கு மின் தடை பற்றி அறிவிப்புகள் முன்னதாக வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.  இதற்கு முன்னதாக பருவ மாற்ற நெருக்கடியை பொதுமக்கள் சமாளிக்க உதவும் விதமாக வணிக நிறுவனங்களுக்கான மின்சாரத்திற்கு MWh ஒன்றுக்கு£211 உச்சவரம்பாகவும் எரிவாயுவுக்குMWh ஒன்றுக்கு£75 உச்சவரமாகவும் பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது. மேலும் ரஷ்ய எரிவாயு பொருட்களை பிரித்தானியா நம்பி இருப்பதை குறைப்பதற்கான திட்டத்தையும் பிரித்தானிய அரசாங்கம் அறிவித்திருக்கிறது.

Categories

Tech |