சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தேவையான ஆக்சிஜன் உள்ளதா ?என்று மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி நேரில் சென்று ஆய்வு செய்தார்.
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி ஆய்வு மேற்கொண்டார். அங்கு அவர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு போதுமான ஆக்சிஜனை உள்ளதா ? என்று கேட்டறிந்ததோடு ஆக்சிஜன் வாயு உள்ள டேங்கை நேரில் சென்று பார்வையிட்டார்.
அதேபோல் மருத்துவமனைக்கு உள்ளே சென்று ஆய்வு செய்த அவர் நோயாளிகளிடம் முறையாக சிகிச்சை அளிக்கப்படுகிறதா ? என்று கேட்டறிந்தார். அதன் பின் கொரோனா தடுப்பூசி இரண்டாவது டோஸ் போட்டு கொள்ள வந்தவர்களிடம் தடுப்பூசி போட்டு கொண்ட பின் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டதா ? என்றும் கேட்டறிந்தார்.