Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“தேவையான இடங்களில் தடுப்பணைகள் அமைக்கப்படும்”… நத்தம் தொகுதியில்… தி.மு.க. வேட்பாளர் சூறாவளி பிரச்சாரம்..!!

திண்டுக்கல் நத்தம் சட்டமன்ற தொகுதியில் தி.மு க. வேட்பாளர் ஆண்டிஅம்பலம் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

தற்போதைய தி.மு.க. வேட்பாளராகிய ஆண்டிஅம்பலம் எம்.எல்.ஏ. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் சட்டமன்ற தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும் புதுப்பட்டி, வேலம்பட்டி, பாதசிறுகுடி, அப்பாஸ்புரம், மீனாட்சிபுரம், மாம்பட்டி, செங்குளம், அசோக்நகர், நத்தம், கோவில்பட்டி, ஆவிச்சிபட்டி உள்ளிட்ட இடங்களில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு ஆண்டிஅம்பலம் எம்.எல்.ஏ வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது பொதுமக்ககளிடையே அவர் பேசியதாவது:- தமிழகத்தில் கியாஸ் சிலிண்டர், பெட்ரோல்-டீசல் ஆகிய அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வடைந்துள்ளது.

இதனால் நடுத்தர, ஏழை மக்களின் வாழ்வாதாரம் பெரிதளவு பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த விலைவாசி உயர்வுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு மக்கள் வருகின்ற ஆறாம் தேதி தயாராகிவிட்டனர். அனைத்து கிராமங்களிலும் சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நத்தம் தொகுதியில் செய்து தரப்படும். நீர் நிலைகளில் ஆய்வு செய்து விவசாயத்தை மேம்படுத்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். தமிழகத்தில் நல்லாட்சி விரைவில் மலரும். தேவையான இடங்களில் தடுப்பணைகள் நத்தம் மலையடிவார பகுதிகளில் அமைக்க ஏற்பாடு செய்யப்படும் இவ்வாறு அவர் பேசினார்.

Categories

Tech |