தைவான் தனி பிராந்தியம் இல்லை சீனாவின் ஒரு அங்கமாகவும் எனது நிலைப்பாட்டை சீனா தொடர்ந்து உலக அரங்கில் அறிவுறுத்தி இருக்கிறது. அதேநேரம் தைவான் பிராந்தியத்தின் தன்னாட்சி உரிமையை அமெரிக்கா துணை நின்று பாதுகாக்கும் என அமெரிக்க அரசு தொடர்ந்து கூறிக் கொண்டிருக்கிறது. இதற்கிடையே அமெரிக்கா நாடாளுமன்ற சபாநாயகர் ஆன நான்சி ஆசிய நாடுகளுக்கான தனது சுற்றுப்பயணத்தை கடந்த ஒன்றாம் தேதி தொடங்கியுள்ளார். தனது ஆசிய பயணத்தில் தைவான் நாட்டிற்கும் நான் சி செல்வார் என கூறப்பட்டது. நான்சியின் இந்த பயணத்திற்கு சீனா கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சீனாவின் எதிர்ப்பையும் மீறி நான்சி விமானம் மூலம் தைவானுக்கு சென்றுள்ளார். நான்சியின் வருகைக்கு சீனா கடுமையான எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்ற நிலையில் தற்போது தைவான் எல்லை அருகே சீனா தனது ராணுவ நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. தைவானின் எல்லை பகுதி அருகே சீன ராணுவம் அதிநவீன ஏவுகணைகளை வீசி போர் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் தைவான் நாட்டின் முக்கிய தீவு ஒன்றின் மீது தாக்குதல் நடத்த சீனா தயாராகி உள்ளதாக தைவான் பாதுகாப்பு துறை அமைச்சரும் குற்றம் சாட்டியிருக்கிறது.
மேலும் சீனாவின் பல்வேறு போர்க்கப்பல்களும், ராணுவ மானங்களும் தங்கள் எல்லைக்குள் நுழைந்திருப்பதாக தைவான் தெரிவித்துள்ளது. இந்த சூழலில் தைவான் பிராந்தியத்தில் போர் பதற்றம் நிலைமை அதிகரிப்பதை கண்டு சர்வதேச ஆதரவை வழங்க தைவான் அதிபர் சாய் இங் வென் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அவர் வெளியிடுள்ள twitter பதிவில் தைவான் அரசும் இராணுவமும் சீனாவின் ராணுவ பயிற்சிகள் மற்றும் போர் நடவடிக்கைகளை நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றது. தேவையான பதிலடி நடவடிக்கைகளுக்கு தயாராக இருக்கிறது. மேலும் தைவான் பிராந்தியத்தில் போர் பதற்ற நிலைமை அதிகரிப்பதை தடுக்க சீனா ஆதரவை கேட்டுக் கொள்கின்றேன் என தெளிவான அதிபர் கூறியுள்ளார்.