LGBTQ எனும் திருநங்கைகள், தன்பாலின ஈர்ப்பாளர்கள் ஆகியோரை தேவையில்லாமல் விசாரணை என்ற பெயரில் தொந்தரவு செய்யக் கூடாது என்று தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகள் நடைமுறை விதிகளில் புதிய சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆகவே சட்டத்தின் அடிப்படையில் மட்டுமே மூன்றாம் பாலினத்தவரை காவல்துறை விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு விசாரணை என்ற பெயரில் திருநங்கைகளை தேவையின்றி தொந்தரவு செய்யக்கூடாது என தமிழக காவல்துறையில் புதிய விதி சேர்க்கப்பட்டிருப்பது திருநங்கைகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.