மருத்துவர் ஒருவர் தேவையில்லாமல் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளதால் அவருக்கு இழப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவிலுள்ள இண்டியானா மாகாணத்தில் பணியாற்றி வரும் பிரபல இந்திய அமெரிக்க மருத்துவருக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் 66 மில்லியன் டாலரை அவர் இழப்பீடாக வழங்க முடிவு செய்துள்ளது. இவர் 260 நோயாளிகளுக்கு தேவை இல்லாமல் அறுவை சிகிச்சை செய்துள்ளார் என்பதால் இதயவியல் நிபுணரான மருத்துவர் அரவிந்த் காந்தி மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சுமார் 490 கோடி ரூபாயை இழப்பீடாக அவர் வழங்குவதாக ஒப்புக்கொண்டுள்ளார். ஆனாலும் அந்த மருத்துவர் இந்த இழப்பீடு தொகையை கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளது பற்றிய தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
இந்த வழக்கு சம்பந்தமாக இந்திய மாகாணத்தில் செயல்பட்டு வரும் மூன்று முக்கிய குழுமங்கள் சேர்ந்து இந்த முடிவுக்கு வந்துள்ளன. நோயாளிகளை தேவையில்லாமல் அறுவை சிகிச்சை செய்வதாக மருத்துவ காந்தி மீது சுமார் ஆறு வருடங்களுக்கு முன்னரே புகார் அளிக்கப்பட்டுள்ளது. 2012ல் அவர் மீது 20 நோயாளிகள் புகார் அளித்த நிலையில் 2016ல் அது 300 புகார்களாக அதிகரித்துள்ளது. இதையடுத்து இந்த விவகாரத்தில் காந்தி மீது முதல் தீர்ப்பு 2011 டிசம்பர் மாதம் வெளியானது என்பது குறிப்பிடதக்கது.