Categories
உலக செய்திகள்

“தேவையில்லாம சீண்டி பாக்காதீங்க!”…. விளைவுகள் மோசமா இருக்கும்…. அமெரிக்காவுக்கு வார்னிங் கொடுத்த சீனா….!!!!

தைவான் விவகாரத்தில் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது. இந்த மோதல் சீனாவில் நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியிலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளதாக சீனா கூறுகிறது. ஏற்கனவே அமெரிக்கா கடந்த மாதம் சீனாவின் மனித உரிமை மீறல்கள் காரணமாக அதிகாரப்பூர்வ குழுவை குளிர்கால ஒலிம்பிக்கிற்கு அனுப்பப் போவதில்லை என்று அறிவித்தது.

இந்நிலையில் சீனா அமெரிக்காவை கடுமையான எச்சரித்துள்ளது. அதாவது சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி, அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கனிடம் பேசிய போது “அமெரிக்கா பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் தலையிடாமல் இருக்க வேண்டும். அதேபோல் தைவான் விவகாரத்தில் தலையிடுவதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும். சீனாவுக்கு எதிராக சதியுடன் செயல்படுவதையும் நிறுத்துங்கள்” என்று அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |