பெட்ரோல்- டீசல் மீதான வாட் வரியை உயர்த்திய முட்டாள்தான் அதனை குறைக்க வேண்டும் என மத்திய அரசை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கடுமையாக சாடியுள்ளார்.
முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “தெலங்கானாவில் டி.ஆர்.எஸ் ஆட்சி அமைந்ததிலிருந்தே வாட் வரி உயர்த்தப்படவில்லை. ஒரு பைசா கூட நாங்கள் உயர்த்தவில்லை. எந்த முட்டாள் நம்மிடம் வாட் வரியை குறைக்கச் சொல்வான்? வாட் வரியை உயர்த்திய முட்டாள்தான் அதைக் குறைக்க வேண்டும். மேலும் பெட்ரோல், டீசல் மீதான செஸ் வரியை மத்திய அரசு நீக்க வேண்டும்.
கடந்த 7 வருடங்களில் பா.ஜ.க அரசு என்ன செய்தது? இந்தியாவின் ஜி.டி.பி வங்கதேசம், பாகிஸ்தானை விட குறைவாக உள்ளது. ஆனால் மத்திய அரசோ வரிகளை உயர்த்தியுள்ளது. மேலும் மாநில பா.ஜ.க தலைவர் சஞ்சய் விவசாயிகளிடம் நெல் பயிரிடுமாறும், அதை மத்திய அரசு வாங்கிக்கொள்ளும் எனவும் கூறி பொய்யைப் பரப்பி வருகிறார். இப்படி தேவையற்ற முறையில் பேசிக்கொண்டிருந்தால் உங்கள் நாக்கை அறுப்போம்” என கடுமையாக பேசியுள்ளார்.