Categories
மாநில செய்திகள்

தேவை இருக்கும் இடத்தில் காணப்படும் தூய்மையே மகத்தானது… தலைமை செயலாளர் பாராட்டு….!!!

சென்னை திருவொற்றியூர் அண்ணாமலை நகரில் கணேஷ் ராமன்(36) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த மார்ச் மாதம் 100 கிராம் தங்க நாணயத்தை வாங்கி ஒரு கவரில் போட்டு வீட்டின் கட்டிலுக்கு கீழ் வைத்துள்ளார். இது தெரியாத அவரது மனைவி வீட்டை சுத்தம் செய்யும்போது அந்த கவரை குப்பையில் போட்டுள்ளார். இதுகுறித்து கணேஷ் ராமன் சாத்தாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் தூய்மைப் பணியை மேற்கொள்ளும் தனியார் ஒப்பந்த நிறுவனம் மேற்பார்வையாளர் செந்தமிழ் செல்வன் என்பவரிடம் தகவல் தெரிவித்து, அவர் தூய்மைப் பணியாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.

இதையடுத்து  குப்பைகளை தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர் மேரி என்பவர் தங்கம் இருந்த கவரை எடுத்து அதுகுறித்து மேற்பார்வை தகவல் தெரிவித்து சாத்தாங்காடு காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். அதைத் தொடர்ந்து தூய்மைப் பணியாளர் மீது கையால் கணேசன் தம்பதியிடம் தங்கத்தை போலீசார் ஒப்படைத்தனர். 100 கிராம் தங்க நாணயத்தை நேர்மையாக ஒப்படைத்த மேரிக்கு போலீசார் மற்றும் பொதுமக்கள் பல்வேறு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குப்பை சேகரிக்கும் போது கிடைத்த தங்கத்தை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு பாராட்டு தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், தேவை இருக்கும் இடத்தில் காணப்படும் தூய்மையே மகத்தானது. குப்பையில் கிடைத்த தங்கத்தை உரிமையாளரிடம் ஒப்படைத்த உங்கள் நேர்மை காரணமாக உங்களிடம் உள்ள தங்கமான உள்ளத்தை நாங்கள் அறிய முடிந்தது. மேலும் நீங்கள் தூய்மை பணியாளர்கள் மட்டுமல்ல தூய்மையான பணியாளர்கள் என்று நேர்மைக்கு மனமார்ந்த பாராட்டு தெரிவித்தார். நேர்வழியை காட்டிலும் நீளமானவை என்பதற்கு நீங்கள் சான்று என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |