Categories
Tech டெக்னாலஜி

தேவை இல்லாத மெயில்கள் அனைத்தையும்… ஒரே கிளிக்கில் டெலிட் பண்ணலாம்?…. இதோ ஈஸியான வழிமுறைகள்….!!!!

தனித் தனியாக ஒவ்வொரு மெயில்களை தேர்ந்தெடுத்து நீக்காமல் ஈசியாக ஒரே கிளிக்கில் அனைத்தையும் டெலீட் செய்து விடலாம். இதுகுறித்த வழிமுறைகளை இப்பதிவில் நாம் தெரிந்துகொள்வோம்.

# முதலாவதாக ஜிமெயிலுக்கு சென்று உங்களது அக்கவுண்டை லாகின் செய்து உள்ளே செல்லவும். எந்த கேட்டகிரியிலுள்ள மெயிலை டெலீட் செய்ய விரும்புகிறீர்களோ அதை தேர்வு செய்யவும்.

# மேல் புறத்தில் ஆர்ச்சிவ் பாக்ஸுக்கு அருகில் உள்ள செக்பாக்ஸை க்ளிக் செய்யவும். அதன்பின் “செலெக்ட் ஆல்.. கான்வர்சேஷனை<கேட்டகிரி>” என்பதனை தேர்வு செய்யவும்.

# அதனை தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தேவை இல்லாத மெயில்கள் அனைத்தையும் டெலீட் செய்ய மேலேயுள்ள டெலீட் பட்டனை க்ளிக் செய்யவும். அடுத்ததாக ஓகே என்பதை தேர்வு செய்யவும்.

# இவ்வாறு செய்வதன் வாயிலாக தேவை இல்லாமல் ஒவ்வொரு மெயிலையும் தனித் தனியாக டெலீட் செய்யாமல் மொத்தமாக டெலீட் செய்து விடலாம். எனினும் இந்த அம்சமானது டெஸ்க்டாப்பிற்கு மட்டும்தான் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |