Categories
தேசிய செய்திகள்

“தேவை: வீட்டுக்கு வீடு வேலை வாய்ப்பு”….. ஆனால் உண்மை “வீட்டுக்கு வீடு வேலையின்மை”….. ராகுல்காந்தி டுவிட்…..!!!

நாட்டில் வேலைவாய்ப்பின்மையின் அளவை வெளிப்படுத்தும் சிஐஎம்இஅமைப்பின் புள்ளி விவரத்தை ராகுல் காந்தி  வெளியிட்டுள்ளார். அதன்படி கடந்த 2017 -2018 ஆம் நிதி ஆண்டில் நாட்டில் வேலை வாய்ப்பின்மை விகிதம் 21 சதவீதமாக இருந்தது. அது 2019 ஆம் ஆண்டு 30 சதவீதமாகவும், 2020 ஆம் ஆண்டு 37 சதவீதமாகவும், 2021 ஆம் ஆண்டு 39 சதவீதமாகவும், 2022 ஆம் ஆண்டு 42 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. கடந்த ஐந்து வருடங்களில் வேலை வாய்ப்பின்மை 100% உயர்ந்துள்ளது. இதனை சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி வருடத்திற்கு இரண்டு கோடி வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆயிற்று என பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் வேலை வாய்ப்பின்மை அதிகம் உள்ள நாடுகள் குறித்த உலக வங்கி வெளியிட்ட புள்ளி விவரத்தை ராகுல் காந்தி தனது twitter பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதில் அதிகபட்சமாக இந்தியாவில் 28.3% வேலைவாய்ப்பின்மையும், அதற்கு அடுத்த இடத்தில் உள்ள இலங்கையில் 26.1% வேலைவாய்ப்பின்மையும் நிலவுவதாக கூறப்பட்டுள்ளது. இதனை ட்விட்டரில் பகிர்ந்து உள்ள ராகுல் காந்தி, “தேவை: வீட்டுக்கு வீடு வேலை வாய்ப்பு. ஆனால் உண்மை நிலை: வீட்டுக்கு வீடு வேலையின்மை”என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |