Categories
தேசிய செய்திகள்

தோழிகளாக இருந்து… ஓரின சேர்க்கையாளர்களாக மாறிய இரு பெண்கள்… விசாரணையில் அளித்த அதிரடி வாக்குமூலம்..!!!

டில்லி மட்டும் ஹரியானாவை சேர்ந்த இரண்டு தோழிகள் ஓரின சேர்க்கையாளராக மாறி வீட்டை விட்டு ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி மாடல் டவுன் ராஜ்புரா பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணும், ஹரியானா கைத்தல் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணும் நீண்ட நாட்களாக தோழிகளாக இருந்து வந்துள்ளன. இருவரும் பெரும்பாலான நேரங்களை ஒன்றாகவே செலவு செய்துள்ளனர். எங்கு சென்றாலும் ஒன்றாக போவது வருவது என்று மிக நெருங்கிய தோழிகளாக இருந்து வந்துள்ளனர். இதையடுத்து சில ஆண்டுகள் கழித்து இவர்கள் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. இவர்கள் இருவரும் பெண் என்பதால் முதலில் காதலை ரகசியமாக வைத்திருந்தனர். சில நேரங்களில் வீட்டில் பொய் கூறிவிட்டு இருவரும் தனியாக சந்தித்து வந்துள்ளனர்.

ஒருகட்டத்தில் இருவரும் இந்த விஷயத்தை வீட்டில் கூற முடிவு செய்தனர். இருவரும் வீட்டில் கூறியபோது பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தது மட்டுமல்லாமல் இருவரையும் பேசவே கூடாது என்று பல கட்டுப்பாடுகளை விதித்தனர். இருவரையும் பிரிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதை உணர்ந்த அந்த இரண்டு பெண்களும் தங்களது வீட்டை விட்டு ஓடி லக்னோ பகுதிக்கு சென்று தனியாக வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து அங்கு தங்கி வந்துள்ளனர். இரண்டு பெண்களும் வீட்டை விட்டுப் போன நிலையில் இருவரின் பெற்றோர்களும் காவல்துறையிடம் தங்களது பெண்களை காணவில்லை என்று புகார் அளித்தனர்.

புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த பெண்களின் செல்போன்களை டிராக் செய்து லக்னோவில் இருப்பதை தெரிந்து கொண்டனர். பின்னர் அங்கு சென்று அவர்களை பிடித்து விசாரித்தபோது அவர்கள் இருவரும் ஓரின சேர்க்கையாளர்கள் என்பதும், தங்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தங்கள் வீட்டை விட்டு ஓடி வந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இது மட்டுமல்லாமல் டெல்லியில் இருந்து வந்த பெண் விரைவில் பாலின மாற்றம் செய்து ஆணாக மாறுவதற்கு முயற்சி செய்து வருவதாகவும், ஆபரேஷன் நடந்த பிறகே நாங்கள் இருவரும் சந்தோஷமாக வாழ இருப்பதாகவும் கூறியுள்ளனர். இதையடுத்து போலீசார் 2 பெண்களையும் டெல்லி போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |