Categories
ஆன்மிகம் இந்து

தைப்பூசத் திருநாள் தோன்றிய கதை… “முருகனை எப்படி வழிபட வேண்டும்”… இத பாத்து தெரிஞ்சுக்கோங்க..!!

தைப்பூசத் திருநாள் எவ்வாறு தோன்றியது, எவ்வாறு முருகப் பெருமானை விரதமிருந்து வழிபடலாம்?

முருகப்பெருமான் அழகின் வடிவானவர்.எந்த கடவுளை மறந்தாலும் கந்தக் கடவுளை மறக்காதே என்று பழமொழி கூறுகிறது. அவ்வாறு முருகப்பெருமான் மிகவும் கருணை உள்ளம் கொண்டவர். அவருக்கு மிகவும் உகந்த நாட்களாக சஷ்டி, கிருத்திகை போன்ற நாட்கள் திகழ்கிறது. அவ்வாறு தைப்பூசத் திருநாள் முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாளாகும் .

அசுரர்களை அழிப்பதற்காக ஆண்டி கோலத்தில் பழனி மலை மீது நின்றிருக்கும் முருகனுக்கு சக்திதேவி தைப்பூசத் திருநாளில்தான் அவருக்கு ஞானவேல் வழங்கினார். இதன் காரணமாகத்தான் மற்ற முருகனின் அறுபடை வீடுகளை காட்டிலும் பழனி மலையில் மிகக் கோலாகலமாக தைப்பூச திருவிழா கொண்டாடப்படுகிறது.

அவ்வாறு பார்வதிதேவியிடம் கொண்ட ஞான வேலை கொண்டு தான் முருகப்பெருமான் அசுரர்களை அழித்தார் என்று புராணக் கதை கூறுகிறது. இப்பேற்பட்ட தைப்பூசத் திருநாளில் எப்படி நாம் விரதமிருந்து முருகப் பெருமானை வழிபடலாம் என்பதை பார்ப்போம். தைப்பூசத் திருநாளில் காலையில் எழுந்தவுடன் வீட்டை சுத்தம் செய்து குளித்துவிட்டு நெற்றியில் திருநீறு அணிந்து வீட்டில் விளக்கேற்றி எப்பொழுதும் போல தெய்வங்களை வழிபட்டு முருகப்பெருமானின் படத்திற்கு முன்பாக தீபமேற்றி நம்மால் முடிந்த நைவேத்தியத்தை அவருக்கு படைத்து கந்த சஷ்டி கவசம், கந்தர் அலங்காரம், திருமுருகாற்றுப்படை , திருப்புகழ் சுப்பிரமணிய புஜங்கம் உள்ளிட்ட முருகப் பெருமானுக்கு உகந்த பாடல்களை காலையிலிருந்து மாலை வரை படிக்கலாம்.

வேலைக்கு செல்பவர்கள் அதிகாலையிலேயே பூஜையை  முடித்துவிட்டு முருகப்பெருமானின் அறுபடையை  போற்றி பாடல்களை பாடி விட்டு வேலைக்கு செல்லலாம். அன்று முழுவதும் எந்த வேலைகளை செய்து கொண்டிருந்தாலும் “ஓம் சரவணபவ” என்ற மந்திரத்தை உச்சரிப்பது நல்லது. விரதம் இருப்பவர்கள் தண்ணீரை மட்டும் உட்கொண்டு மாலை வரை விரதமிருந்து மாலையில் அருகிலுள்ள முருகப்பெருமானின் கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை வழிபட்டு அங்கு கொடுக்கப்படும் பிரசாதத்தை எடுத்து உட்கொண்டு விரதத்தை பூர்த்தி செய்யலாம்.

அவ்வாறு இருக்க இயலாதவர்கள் பால் அல்லது பழத்தை முருகப்பெருமானுக்கு படைத்து அதை பிரசாதமாக எடுத்துக் கொண்டு காலையும் மதியமும் அதை உண்டு மாலை முருகப்பெருமானின் சன்னதிக்கு சென்று அவரை வழிபட்டு தரிசித்துவிட்டு அங்கு கொடுக்கப்படும் பிரசாதத்தை எடுத்து கொண்டு விரதத்தை பூர்த்தி செய்யலாம். ஆரோக்கிய குறைபாடு உள்ளவர்கள், கர்ப்பிணி பெண்கள் போன்றவர்கள் விரதம் இருக்காமல் முருகப் பெருமானை பூஜித்து வழிபாடு செய்யலாம்.இந்தத் தைப்பூச திருநாளில் காவடி எடுத்தல் , பால்குடம் தூக்குதல் போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ளலாம்.

இவ்வாறு நாள் முழுவதும் முருகப்பெருமான் மீது சிந்தனையைச் செலுத்தி அவரை மனதார வணங்கி வழிபட்டால் அவரிடம் எந்த பிரார்த்தனையை நாம் செலுத்தினாலும் அந்தப் பிரார்த்தனை நிச்சயமாக நிறைவேறும். இந்த ஆண்டு தைப்பூசம் ஜனவரி 28ஆம் தேதி வருகிறது. அதாவது தை மாதம் 15ஆம் தேதி வருகிறது. எனவே அனைவரும் இந்த தைப்பூசத் திருநாளில் மேற்கூறியவாறு முருகப்பெருமானை வழிபட்டு அவரது கருணை கடாட்சத்திற்க்கு பாத்திரமாகலாம்.

Categories

Tech |