Categories
ஆன்மிகம்

தைப்பூசம்: “வரம் தருவான் வடிவேலன்”…. வீட்டிலிருந்தே வழிபடுவது எப்படி?….!!!!

தைப்பூசம் என்பது முருகனுக்கு உகந்த நாள். அன்றைய தினத்தில் முருகப்பெருமானை வழிபாடு செய்தால் செல்வம் பெருகும். செல்வாக்கு மேலோங்கும். மகர ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதமே தை மாதம். அத்தகைய மாதத்தில் வருகின்ற பூசத்தை தான் மாத பெயரோடு இணைத்து தைப்பூசம் என்று அழைக்கிறார்கள். இந்த நன்னாளில் முருகனை வழிபட நினைப்பவர்கள் மார்கழி மாதத்தில் மாலை போட்டுக்கொண்டு காலை, மாலை என இரு வேளைகளிலும் குளித்து கவச பாராயணங்களை படித்து வழிபாடு செய்வார்கள்.

ஐப்பசி மாதம் வருகின்ற சஷ்டி திதியில் முருகன் போராடி வெற்றி பெற்றார். அவருக்கு தாய் யான வேலை வழங்கிய நல்ல நட்சத்திரம்தான் பூச நட்சத்திரம். ஒருவரின் போராட்டமான வாழ்க்கையை பூந்தோட்டமாக மாற்றக்கூடிய நட்சத்திரம் இதுவே. அந்த நன்னாள் தான் இன்று. இன்றைய நாளில் முருகப்பெருமானை வழிபட்டால் இல்லத்தில் இனிய சம்பவங்கள் அதிகம் நடைபெறும். பொதுவாகவே அனைவருக்கும் அதிக ஆசைகள் நிறைவேற வேண்டும் என்று எண்ணம் இருக்கும். அந்த ஆசைகள் எல்லாம் நிறைவேற வைப்பது தைப்பூச வழிபாடு தான்.

இல்லத்தில் வழிபாடு செய்பவர்கள் பஞ்சமுக விளக்கேற்றி, 5 வகை எண்ணெய் ஊற்றி, ஐந்து வகை பரிமள பொருள்கள் வைத்து, 5 வகைப் பூக்கள் மாலை சூட்டி, ஐந்து வகை நைவேத்தியம் படைத்து, ஐந்து வகை பழங்கள் வைத்து கந்தன் துதிப்பாடல்கள் மற்றும் கவச பாராயணங்களைப் படித்தால் முருகப்பெருமான் உங்களுக்கு வரம் அருள்வார்.

Categories

Tech |