Categories
ஆன்மிகம்

தைப்பூச விரதம்….!! வறுமைகள் நீங்கி வளம் பெற…. இதை மட்டும் செய்தால் போதும்…..!!

இந்த 2022ஆம் ஆண்டு தைப்பூசம் செவ்வாய்க்கிழமை தை மாதம் 5ஆம் தேதி ஜனவரி 18ம் நாள் அன்று கொண்டாடப்படுகிறது. இந்த தைப்பூச நாளன்று எப்படி விரதம் இருப்பது என்பது முழு தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நாள் முழுவதும் காலை முதல் மாலை வரை முருகனை நினைந்து உபவாசம் இருந்து முருகனை தரிசித்து, வழிபாடு செய்வது நல்லது. இதில் காலை மதியம் என இருவேளையும் பால், பழம் மட்டுமே அருந்தி விரதம் இருந்து மாலையில் முருகன் கோயிலிற்கு சென்று வழிபடுவது சிறந்தது. முருகனை வழிபடும் சமயத்தில் முருக வேலையும் சேர்த்து வழிபடுவது நல்லது.

முருக பக்தர்கள் பலர் தைப்பூச விரதத்தை 48 நாட்கள் இருப்பது வழக்கம். மார்கழி மாதத்தில் தொடங்கி தைப்பூசம் வரை விரதம் இருப்பது வழக்கம். அன்னை பார்வதி தேவி, முருகனுக்கு ஞானவேல் வழங்கியது இந்த நன்னாளில் தான். அந்த ஞானவேல் கொண்டே முருகப்பெருமான் அசுரவதம் புரிந்தார் என்பது வரலாறு. தைப்பூச நாளில் முருகனுக்குரிய வேலை வழிபடுவதன் பயனாக தீய சக்திகள் நம்மை அண்டாது. இதனால் வறுமை நீங்கி செல்வமும், வசதி வாய்ப்புகளும் கிடைக்கப் பெறும் என்பது ஐதீகம். இந்த நாளில் குரு பகவானையும், சிவபெருமானையும், முருகப் பெருமானையும் வழிபடுவது மிகுந்த விசேஷசமாகும்.

Categories

Tech |