கடையில் பற்றி எரிந்த தீயை ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் கல்கொத்து பகுதியில் சரஸ்வதி என்பவர் வசித்து வருகிறார். இவரது தையல் கடை பவானிசாகர் மார்க்கெட் சதுக்கம் பகுதியில் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் தையல் கடையில் இருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு கடையில் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர். இந்த தீ விபத்தில் கடையில் இருந்த 3 தையல் இயந்திரங்கள், தைப்பதற்காக வைக்கப்பட்ட துணிகள் உள்ளிட்டவைகள் எரிந்து நாசமானது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.