தைராய்டு மற்றும் தைராய்டினால் ஏற்படும் உடல் எடை அதிகரிப்பை குறைக்க எளிமையான மருத்துவ குறிப்பு இந்தத் தொகுப்பில் காண்போம்.
சீத்தாப்பழ இலைகளை நன்றாக சுத்தம் செய்து இரண்டு கப் தண்ணீர் வைத்து அதில் சுத்தம் செய்த இலைகளை போட்டு நன்றாகக் கொதிக்க வைக்கவும். இரண்டு கப் தண்ணீர் ஒரு கப் தண்ணீராக வற்றும் வரை கொதிக்க வைக்கவும். பின்னர் மூடி வைத்து விடவும். இதனை காலையில் வெறும் வயிற்றில் மற்றும் மாலையில் வெறும் வயிற்றில் ஒரு கப் அருந்த வேண்டும். சுவை தேவைப்பட்டால் இதனுடன் சிறிது தேன் கலந்து கொள்ளலாம். இது ஆரம்பகால தைராய்டை முற்றிலுமாக பத்தே நாட்களில் சரிசெய்துவிடும்.
முற்றிய நிலையிலிருக்கும் தைராய்டு பிரச்சனைக்கான தீர்வு ஒரு கப் அளவு தண்ணீரில் ஒரு டீஸ்பூன் கொத்தமல்லியை போட்டு கொதிக்க வைக்கவும். ஒரு கப் தண்ணீர் அரை கப் தண்ணீர் ஆகும்வரை கொதிக்கவிடவும். பின்னர் இதனை மூடி வைத்துவிட்டு ஐந்து நிமிடங்கள் கழித்து இதனை வடிகட்டி இதனுடன் ஒரு ஸ்பூன் அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து கொள்ளவும். காலையில் வெறும் வயிற்றில் ஒரு வேளை இதனைக் குடிக்க வேண்டும். ஒரு நாள் இரண்டு முறை இதனை தொடர்ந்து குடித்து வந்தால் ஒரு மாதத்திற்குள்ளாக எந்த அளவில் இருந்தாலும் தைராய்டு குணமாகும்.