Categories
இந்திய சினிமா சினிமா பேட்டி

“தைரியம் இருந்தால்” என் முகத்திற்கு நேர் பண்ணட்டும்…. செல்ல மகளுக்காக கொந்தளித்த அபிஷேக் பச்சன்….!!

மகள் ஆராத்யாவை கேலி செய்த விமர்சனங்களுக்கு அபிஷேக் பச்சன் பதிலடி கொடுத்துள்ளார்.

பாலிவுட் உலகின் ரியல் ஜோடி அபிஷேக் பச்சன்-ஐஸ்வர்யா ராய். 2007ஆம் வருடம் காதல் திருமணம் செய்துகொண்ட இத்தம்பதியினருக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். கடந்த மாதம் 16ம் தேதி ஆராத்யா தனது 10வது பிறந்தநாளை குடும்பத்தினருடன் மாலத்தீவில் வெகு விமரிசையாக கொண்டாடினார். இது தொடர்பான புகைப்படங்களை அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் சமூகவலைதளத்தில் வெளியிட்டனர்.

இதனை பார்த்த ரசிகர்கள் பலர் தங்கள் வாழ்த்துக்களை ஆராத்யாவுக்கு தெரிவித்தனர். அதோடு சிலர் கேலியாக விமர்சனங்களும் செய்திருந்தனர். இந்நிலையில் நேற்று அபிஷேக் பச்சனின் ‘பாப் பிஸ்வாஸ்’ படம் வெளியீட்டைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, ஆராத்யாவை விமர்சனம் செய்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அபிஷேக் பச்சன், “பிரபலமாக இருந்தால் விமர்சனங்களை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். எனது நடிப்பை குறை கூறினால் நிச்சயமாக மாற்றிக் கொள்வேன். ஆனால் எனது மகளை கேலி செய்வதை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது. தைரியம் இருந்தால் கேலி செய்ய நினைப்பவர்கள் என் முகத்திற்கு நேர் கேலி செய்து பார்க்கட்டும்” என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |