Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“தைல மர தோட்டத்தில் தீ விபத்து”….. முற்றிலும் எரிந்து நாசம்….!!!!!

செங்கோடம்பாளையம் கிராமத்தில் உள்ள தைல மரத் தோட்டத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள முத்தூர் அருகே இருக்கும் செங்கோடம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த குழந்தைசாமி என்பவர் விவசாயம் செய்து வருகின்றார். இவர் தனது தோட்டத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவில் தைலம் மரம் நட்டு சாகுபடி செய்து இருக்கின்றார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் 12:30 மணியளவில் தைலம் மர தோட்டத்தின் கீழே உள்ள ஒரு பகுதியில் தீப்பிடித்ததுள்ளது. இதனால் குழந்தைசாமி குடும்பத்தினர், அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்க முயற்சித்தும் தீயை அணைக்க முடியவில்லை. இதையடுத்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். பின் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். ஆனால் தைல மரங்கள் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது.

Categories

Tech |