Categories
உலக செய்திகள்

தைவானின் கடற்பகுதியில் பாலிஸ்டிக் ஏவுகணைகள்…. சீனா செய்த செயல்….!!!!!

சீனா-தைவான் இடையிலான பதற்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். கடந்த 1940-களில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது சீனாவும் தைவானும் பிரிக்கப்பட்டது. அப்போது இருந்து தைவான் தன்னை ஒரு சுதந்திரநாடாக அறிவித்து வருகிறது. அதேநேரம் சீனா அதனை தன் மாகாணமாகப் பார்க்கிறது மற்றும் தேவைப்பட்டால் வலுக்கட்டாயமாக இணைக்கபடும் என்று கூறிவருகிறது. அதன்படி தைவான் மீது சீனாவின் தாக்குதல், அச்சுறுத்தல் பல தசாப்தங்களாக இருந்துவருகிறது. சில நாடுகள் மட்டுமே தைவானை அங்கீகரித்துள்ளது. பெரும்பாலான நாடுகள் தைவானை சீனாவின் ஒருபகுதியாகவே கருதுகிறது. தைவானுடன் அமெரிக்கா அதிகாரபூர்வ ராஜதந்திர உறவுகளைக் கொண்டிருக்கவில்லை.

ஆனால் தைவான் உறவுச்சட்டத்தின் கீழ் அமெரிக்கா அதற்கு ஆயுதங்களை விற்கிறது. தைவானின் தற்காப்புக்கு தேவையான உதவிகளை செய்துதருவதாக இச்சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அக்டோபர் 2021ல் அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன், சீனா தைவானைத் தாக்கினால், தைவானை அமெரிக்கா பாதுகாக்கும் என கூறினார். சீனாவின் அனைத்து அச்சுறுத்தல்களையும் மீறி அமெரிக்கா சபா நாயகர் நான்சிபெலோசி தைவானுக்கு வந்துசென்றார். நான்சிபெலோசியின் வருகையால் அதிர்ந்துபோன சீனா, இப்போது தைவான் மீது தாக்குதல் நடத்தலாம் என்று நிபுணர்கள் அச்சம் தெரிவித்து உள்ளனர். தைவானை சுற்றிலும் சீனராணுவம் ராணுவப் பயிற்சியைத் துவங்கியுள்ளது. ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் சர்வதேச சட்டப்பேராசிரியரான டொனால்ட் ரோத்வெல், நான்சி பெலோசியின் தைவான் பயணம் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் தலைமைக்கு ஒரு சவாலாக மாறியிருக்கிறது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20-வது மாநாடு இந்த வருடம் நடைபெற இருக்கிறது. இவற்றில் ஜி ஜின்பிங் தொடர்ந்து 3-வது முறையாக அதிபர் பதவிக்கு வருவார். அத்தகைய நிலையில் பெலோசியின் வருகை ஜின்பிங் மதிப்பை குறைப்பதாக அமையும். ஆகவே அவர் இந்த நடவடிக்கைக்கு வலுவான பதிலைக் கொடுக்கவேண்டும் என எண்ணி இருப்பதாக கூறியுள்ளார். நான்சிபெலோசி வெளியேறியவுடன் சீனா தைவானின் கடல் மற்றும் வான் வெளியில் வடக்கு, தென் மேற்கு, தென்கிழக்கில் ராணுவப் பயிற்சிகளை அறிவித்தது. உண்மையான ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகளுடன் இந்த வாரம் முழுதும் இப்பயிற்சி நடைபெறும் என சீன செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனா போன்ற மாபெரும் சக்தியை சமாளிக்க சமச் சீரற்றபோர் முறையை தைவான் ஏற்றுக் கொண்டது.

இது பார்குபின் உத்தி எனவும் அழைக்கப்படுகிறது. எதிரிக்கு முடிந்தவரையிலும் கடினமான மற்றும் விலை உயர்ந்த தாக்குதலை உருவாக்குவதே இதன் நோக்கம் ஆகும். தைவான் விமான எதிர்ப்பு, பீரங்கி எதிர்ப்பு, கப்பல் எதிர்ப்பு ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகளை வாங்கி குவித்திருக்கிறது. இவற்றில் டிரோன்கள் மற்றும் மொபைல் கடலோர பாதுகாப்பு கப்பல் ஏவுகணை (சிடிசிஎம்) ஆகிய குறைந்த விலை போர்க் கப்பல்களும் அடங்கும். சீனாவின் விலை உயர்ந்த கடற்படை கப்பல்கள் மற்றும் கடற்படை உபகரணங்களை அழிக்கும் திறன் அவைகளுக்கு இருக்கிறது. தைவான் அனைத்து பக்கங்களிலும் கடலால் சூழப்பட்டு இருக்கிறது.

தைவானைக் கைப்பற்றுவதற்கு சீனா அதிக எண்ணிக்கையிலான படைகள், கவசவாகனங்கள், ஆயுதங்கள், வெடி மருந்துகள், உணவு, மருத்துவப்பொருட்கள் மற்றும் எரிபொருளைக் கொண்டுசெல்ல வேண்டும். இது கடல்வழியாக மட்டுமே சாத்தியமாகும். பலஅடுக்கு கடல் பாதுகாப்பை மீறி சீன வீரர்கள் தைவானை அடைந்தாலும் தைவான் கொரில்லா போருக்கு தன் நகரங்களை தயார்செய்துள்ளது. 35 லட்சம் தைவானியர்கள் கொரில்லா போரில் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருக்கின்றனர். இந்நிலையில் சீனா இன்று தைவானின் கடற் பகுதியில் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது. சீனா தைவானின் வடகிழக்கு கடற்கரையில் அருகிலுள்ள ராணுவ முகாமிலிருந்து 2 டாங்பெங் எனப்படும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியதாக தைவான் அரசு தெரிவித்து உள்ளது.

Categories

Tech |