Categories
உலக செய்திகள்

தைவானில் கட்டாய ராணுவ சேவை ஒரு ஆண்டாக நீட்டிப்பு… ஜனவரி 1 முதல் அமல்…!!!!!!

தைவானில் கட்டாய ராணுவ சேவை ஒரு வருடமாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் நடைபெற்ற உள்நாட்டு போரின் போது சீனாவில் இருந்து தைவான் தனி நாடாக மாறியது. ஆனால் தற்போது சீனா தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என கூறி  தைவானை ஆக்கிரமிப்பதற்காக படைப்பலத்தை பயன்படுத்த தயாராகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக சீன ராணுவம் அடிக்கடி தைவனை சுற்றி வளைத்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதனால் சீனாவிடம் இருந்து அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக தைவான் தனது ராணுவத்தை பலப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

தைவான் நாட்டைச் சேர்ந்த ஆண்கள் கட்டாயமாக ராணுவத்தில் நான்கு மாதங்கள் பணியாற்ற வேண்டும் என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது. தற்போது இந்த கட்டாய ராணுவ சேவை ஒரு வருடமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 2024-ம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் இந்த ஒரு வருட கட்டாய ராணுவ சேவை அமலுக்கு வரும் எனவும் கூறப்பட்டுள்ளது. 2005 -ஆம் ஆண்டுக்குப் பின் பிறந்த ஆண்களுக்கு இது பொருந்தும் என தெளிவான அதிபர் சாய் இங் வென் தெரிவித்துள்ளார். அதே சமயம் 2005 ஆம் ஆண்டுக்கு முன்பாக பிறந்த ஆண்கள் தொடர்ந்து நான்கு மாதங்கள் ராணுவ பணியாற்றுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |