தைவான் நாட்டு உடன் வர்த்தகம் தொடர்பான எந்த ஒரு பேச்சு வார்த்தையும் இந்தியா தொடங்கக்கூடாது என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீனாவின் கொள்கைகளை ஆதரித்து வந்த இந்தியா, தற்போது அதனை மீறுவதாகும், தைவான் உடன் வர்த்தகம் தொடர்பாக எந்த ஒரு பேச்சு வார்த்தையையும் நடத்தக் கூடாது என்றும் இந்தியாவிற்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. இது பற்றி சீன வெளியுறவு அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ” சீனாவின் ஒரே கோட்பாட்டுக்கு சர்வதேச நாடுகள் அனைத்தும் கட்டுப்பட வேண்டும். சீனாவை விட்டு பிரிந்து சென்ற தைவானுடன் இந்தியா வர்த்தகப் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது. மேலும் அமெரிக்கா தைவானுக்கு ஆயுத உதவிகள் செய்வதற்கு சீனா கண்டனம் தெரிவிக்கிறது” என்று தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறுகையில், ” உலகில் ஒரே ஒரு சீனா மட்டுமே உள்ளது. தைவான் சீன பிராந்தியத்தின் தவிர்க்கமுடியாத பகுதி. ஒரு சீன கொள்கை என்பதே இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கு ஒரே கருத்து. அதுமட்டுமன்றி எந்த நாட்டுடனும் உறவுகளை வளர்ப்பதற்கு சீனாவுக்கு அரசியல் அடிப்படையாக இது இருக்கும். தைவானுடன் ராஜதந்திர உறவுகளை கொண்ட எந்த ஒரு நாட்டிற்கும் இடையில் எந்த ஒரு வர்த்தக பரிமாற்றங்களையும் சீனா உறுதியாக எதிர்க்கிறது. இந்தியா சீனாவின் கொள்கையை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். மேலும் தைவான் பிரச்சனையை விவேகமாக கையாள வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.