சீனாவிடம் இருந்து பிரிந்து தனி நாடாக உருவான தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என தெரிவித்த சீனா சொந்தம் கொண்டாடி வருகின்றது. இந்த நிலையில் சீனாவில் கடும் எதிர்ப்பை மீறி அமெரிக்க சபாநாயகர் நான்சி சமீபத்தில் தைவானுக்கு சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சீனா தைவான் மற்றும் அமெரிக்காவை மிரட்டும் விதமாக தைவானை நாலாபுறமும் சுற்றி வளைத்து போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.
சீனாவின் ஒரே நாடு கொள்கையை உறுதிப்படுத்துவதற்கு இது போன்ற போர் பயிற்சிகள் தொடரும் எனவும் சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த சூழலில் வெள்ளை மாளிகையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த ஜனாதிபதி ஜோ பைடனின் துணை உதவியாளரும் இந்தோ பசிபிக் ஒருங்கிணைப்பாளருமான குர்ட் காம்ப்பெல் சீனாவின் மிரட்டலுக்கு மத்தியிலும் தைவானை ஆதரிக்கும் அமைதியான மற்றும் உறுதியான நடவடிக்கைகள் அமெரிக்கா தொடரும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.