சீனாவின் கடுமையான எதிர்ப்பை மீறி அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு சென்று அந்நாட்டை கடும் கோபத்துக்கு ஆளாக்கியுள்ளது. இதனால் சீனா மிரட்டும் விதமாக தைவானை சுற்றியுள்ள கடல் மற்றும் வான்வெளியில் சீன ராணுவம் போர்ப்பயிற்சியை கடந்த 4- ஆம் தேதியிலிருந்து தொடங்கியுள்ளது. இந்த போர்ப் பயிற்சியானது தங்கள் மீதான தாக்குதலுக்கான ஒத்திகையாக அமைந்துள்ளதாக தைவான் குற்றம் சாட்டியதோடு, போர்ப்பயிற்சியை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் சீனாவை வலியுறுத்தியுள்ளது. அதே சமயத்தில் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளும் சீனா தனது போர்ப்பயிற்சியை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தின.
ஆனால் இதற்கு செவி சாய்க்காத சீனா, ஏற்கனவே அறிவித்தபடியே நேற்று முன்தினம் 4-வது நாளாக போர்ப்பயிற்சியை தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் மஞ்சள் கடலின் தெற்குப் பகுதியிருந்து வருகிற 15-ஆம் தேதி வரை போர்ப்பயிற்சியை தொடரயுள்ளதாக சீன ராணுவம் அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து, போர்ப்பயிற்சியின் மூலம் சீனா பதற்றத்தை அதிகரித்து வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. மேலும் சீனாவின் போர்ப்பயிற்சி ஆத்திரமூட்டும் மற்றும் பொறுப்பற்ற செயல் எனவும் கண்டனம் தெரிவித்துள்ளது.