Categories
உலக செய்திகள்

தைவான் தீவுக்கு அருகில் சீனா போர் ஒத்திகை…. வெளியான தகவல்….!!!!

சா்ச்சைக்கு உரிய தைவான்தீவுக்கு அருகில் போா் ஒத்திகையில் ஈடுபட்டதாக சீனா அறிவித்து உள்ளது. அந்நாடு தன் அங்கமாகக் கருதி வரும் தைவானுக்கு அமெரிக்க நாடாளுமன்ற கீழவைத் தலைவா் நான்சி பெலோசி செல்லக்கூடும் என தகவல் வெளியாகி பதற்றம் அதிகரித்துள்ள சூழ்நிலையில், சீனா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக சீன அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது “பூஜியன் மாகாணத்தையொட்டிய பிங்டன் தீவில் சீன ராணுவம் போா் ஒத்திகையில் ஈடுபட்டது.

காலை 8 மணிமுதல் 9 மணி வரை நடந்த இந்த போா் ஒத்திகையில் உண்மையான குண்டுகளும் வெடிபொருள்களும் பயன்படுத்தப்பட்டது என அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும் அந்த போா் ஒத்திகையில் ஏவுகணைகள், போா் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டனவா என்பது தொடர்பான தகவல் இல்லை. சீன உள்நாட்டுப் போருக்குப் பின் தைவான் தனி நாடாக செயல்பட்டு வந்தாலும், அத்தீவை தங்களது அங்கமாகவே தற்போதும் சீனா கருதி வருகிறது. தைவானை சீனா உடன் இணைத்துக்கொள்ள தங்களுக்கு உரிமை உள்ளதாகவும், தேவைப்பட்டால் ராணுவ பலம் கூட பயன்படுத்தப்படும் என்றும் சீன அதிபா் ஷிஜின்பிங் கூறிவருகிறாா்.

இந்நிலையில் நான்சி பெலோசி அத்தீவுக்கு பயணம் மேற்கொள்ளக்கூடும் என சென்ற வாரம் தகவல் வெளியாகியது. அது உறுதியானால் சென்ற 1997ஆம் வருடத்திற்கு பின் தைவான் செல்லவிருக்கும் முதல் அமெரிக்க உயா்நிலை எம்.பி.யாக பெலோசி இருப்பாா். இதற்கு சீனாவானது கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகிறது. தைவான் விவகாரத்தில் தலையிடுவதன் வாயிலாக அமெரிக்கா நெருப்போடு விளையாடுகிறது என ஷிஜின்பிங் எச்சரித்தாா். இச்சூழலில் தைவானுக்கு அருகே சீனா தற்போது போா் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |