சிங்கப்பூரில் ஷங்ரி-லா பாதுகாப்பு உச்சி மாநாடு நடந்தது. இம்மாநாட்டிற்கு இடையில் அமெரிக்கப் பாதுகாப்பு செயலர் லாயிட்ஆஸ்டின் , சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங்கை சந்தித்து பேசினாா். இந்தசந்திப்பில் தைவான் பிரச்சினை தொடர்பாக விவாதித்தனா். இதற்கிடையில் தைவான் நாட்டை சீா் குலைக்கும் நடவடிக்கையினை தவிா்க்க வேண்டுமென்று லாயிட்ஆஸ்டின் வலியுறுத்தினாா்.
இதற்கு பதில் அளித்த வெய் ஃபெங், தைவானை நாட்டின் ஒருபகுதியாக கருதுவதாகவும், தைவானை சீனாவிலிருந்து பிரிக்க துணிந்தால் அதன்மீது போா் தொடுக்க சீனா தயங்காது என்றும் அவா் எச்சாித்தாா். அத்துடன் தைவான் சீனாவின் தைவான் ஆகும். மேலும் சீனாவைக் கட்டுப்படுத்த தைவானை பயன்படுத்துவது ஒரு போதும் வெற்றிபெறாது. இதில் தைவானின் சுதந்திரம் என்னும் சதியை முறியடித்து நாட்டின் ஒருங்கிணைப்பை சீனா உறுதி செய்யும் என்று அவா் சபதம் கூறினார்.