Categories
உலக செய்திகள்

தைவான்: மீண்டும் போர் பயிற்சியை தொடங்கிய சீனா….. வெளியான தகவல்….!!!!

சீனாவிடமிருந்து பிரிந்து தனி நாடாக உருவெடுத்த தைவானுக்கு அமெரிக்கா பல வழிகளில் உதவிசெய்து வருகிறது. இது தைவானை தங்களது நாட்டின் ஒருபகுதி என சொந்தம் கொண்டாடிவரும் சீனாவிற்கு கோபத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில் சீனாவின் கடும் எதிர்ப்பை புறம் தள்ளிவிட்டு அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி சென்ற 2ஆம் தேதி தைவான் சென்றார். இவற்றில் கோபமடைந்த சீனா, தைவானை நாலாபுறமும் சுற்றி வளைத்து கடல் மற்றும் வான் வெளியில் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டது. இதன் காரணமாக தைவான் மற்றும் சீனா இடையில் போர் பதற்றமானது உச்சத்தையெட்டியது.

இந்த சூழ்நிலையில், சென்ற 11-ஆம் தேதி சீனா பயிற்சியை நிறைவு செய்தது. இந்நிலையில் பதற்றத்திற்கு மத்தியில் அமெரிக்க நாடாளுமன்றம் உறுப்பினர்கள் 5 பேரை கொண்ட பிரதிநிதிகள்குழு நேற்று முன்தினம் தைவான்சென்றது. இந்த குழுவானது தைவானின் அதிபரான சாய் இங் வென்னை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது. இதன் காரணமாக சீன இராணுவம் தைவானை சுற்றி மீண்டுமாக போர்ப் பயிற்சியை துவங்கியுள்ளது. இது தொடர்பாக சீன இராணுவம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் “தைவான்தீவைச் சுற்றி உள்ள கடல் மற்றும் வான்வெளியில் போர் தயார் நிலை ரோந்து மற்றும் போர்பயிற்சிகள் தொடங்கியுள்ளது.

Categories

Tech |