சீனாவின் கடுமையான எதிர்ப்பையும் மீறி அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி கடந்த மாதம் தைவானுக்கு சென்று பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த சீனா தைவனை சுற்றி வளைத்து போர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. ஆனால் அதன் பின்னரும் அமெரிக்க எம்பிக்கள் அமெரிக்க மாகாணங்களில் கவர்னர்கள் தொடர்ந்து தைவானுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றார்கள். இதனால் அமெரிக்கா சீனா இடையே பதற்றமான சூழல் நிலை வருகின்றது.
மேலும் இந்த பதற்றத்திற்கு மத்தியில் தைவானுக்கு 1.9 பில்லியன் டாலர் மதிப்பிலான இராணு ஆயுதங்களை விற்க அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு இடையே அமெரிக்கா ஜனாதிபதி ஜோபைடன் செய்தியாளர்களின் கேள்விக்கு சமீபத்தில் அளித்த பேட்டி ஞாயிற்றுக்கிழமை அன்று ஒளிபரப்பப்பட்டுள்ளது. அந்த பேட்டியில் ஜோபைடன் பேசியதாவது, தைவான் மீது சீன படையெடுப்பு நடத்தினால் தைவானை அமெரிக்க படைகள் பாதுகாக்கும் என உறுதியாக தெரிவித்துள்ளார்.