தை கடைசி சனியை முன்னிட்டு பத்திரகாளி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ் . வி மங்கலத்தில் பிரசித்தி பெற்ற கூந்தலுடைய அய்யனார் பத்ரகாளி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் தை கடைசி சனியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று கடைசி சனியியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இந்நிலையில் அய்யனார் மற்றும் பத்திரகாளி அம்மனுக்கு பால், பழம், பன்னீர், சந்தனம், உள்ளிட்ட பலவகையான பொருள்கள் கொண்டு அபிஷேகம் செய்து மலர் மாலைகளால் அலங்கரித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதனையடுத்து பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான மக்களுக்கு அன்னதானம் நடைபெற்றுள்ளது.