தமிழக அரசு வழக்கம் போல இந்த ஆண்டும் ரேஷன் கடையில் வாயிலாக பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. இந்த பொங்கல் பரிசு ஒரு துணிப்பையில் வழங்குவது வழக்கம். அந்த துணிப்பையில் தலைவர்களின் பெயர் மற்றும் கட்சிகளின் சின்னம் இடம் பெற்றிருக்கும். ஆனால் இந்த முறை தமிழக அரசு முத்திரை மட்டுமே உள்ளது. இதில் முதல்வர் ஸ்டாலின் படம் இல்லை. அவரது பெயர் மட்டும் இருந்தது. ஆனால் தமிழ் புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துக்கள் என்ற வாசகங்கள் இடம் பெற்றன.
இதனைப் பார்த்த பலர் இந்த முடிவுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தை முதல் நாளே தமிழ் புத்தாண்டாக அறிவித்து புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது ‘பொங்கல் பரிசு வழங்கும் பையில் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என்று போடப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய அவர் அதேபோல தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்தால் அதனால் மகிழும் முதல் நபர் நானாகத்தான் இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.