Categories
அரசியல் மாநில செய்திகள்

தொகுதியா? லட்சியமா? என்றால் லட்சியத்திற்கு தான் முதல் இடம்.! -சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் பேச்சு!

செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், தமிழ்நாட்டில் நடைபெற இருக்கின்ற தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத் தேர்தல் என்பது மிக மிக முக்கியமான தேர்தலாகும். இந்த தேர்தலில் தொகுதிகளின் எண்ணிக்கையா ? இலட்சியமா என்று கேட்டாள் லட்சத்திற்கு தான் முதலிடம் கொடுக்கப்படும். ஏனென்றால் தமிழ்நாடு வகுப்புவாததிற்கு எதிராக களம் கொண்ட மாநிலம். சாதிவெறிக்கு மதவெறிக்கு இடமளிக்காத தமிழ்நாட்டு மக்கள்  ஒற்றுமையை கட்டி காத்து வருகின்றனர்.

சமூக நீதிக்காக போராடி வெற்றி பெற்ற மாநிலம். அப்படிப்பட்ட மாநிலத்தில் நடக்கக்கூடிய தேர்தலில் வகுப்புவாத சக்திகள் சில கட்சிகள் உடைய பலவீனத்தை பயன்படுத்தி வலுவாக காலூன்றும்  அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறார்கள். ஒருபக்கம்  பாரதிய ஜனதாக் கட்சி, அதிமுக திமுக அணி. இன்னொரு புறத்தில் இதனால் உருவாக்கப்பட்ட வேறொரு அணி. இந்த இரண்டு அணிகளையும் எதிர்த்து போராடக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறுவது என்பது மிக முக்கியமான தேவையாகும்.

அந்த அரசியல் தேவையை நன்கு உணர்ந்து இருக்கின்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ,இதற்கான பல முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. பல மாநாடுகளை நடத்தி இருக்கிறது, பல இயக்கங்களை நடத்தி இருக்கிறது .தனித்தும் நடத்தி இருக்கிறது. பல்வேறு மதச்சார்பற்ற ஜனநாயக கட்சியோடு ,முற்போக்கு கட்சிகளோடு ,இடதுசாரி கட்சிகளோடு சேர்ந்து இணைந்து நடத்தி இருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி மதுரை நகரத்தில் பிரம்மாண்டமான பல்லாயிரக்கணக்கான மக்களை அணி திரட்டி ஒரு மாபெரும் மாநாட்டை இந்த நோக்கத்திற்காக லட்சியத்திற்காக நடத்தினோம். இந்த லட்சியம் நிறைவேற்ற வேண்டும் என்று சொல்கின்ற போது மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை பலப்படுத்த வேண்டும். அதை உறுதிப்படுத்த வேண்டும் என்பதிலும், தொடர்ந்து பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.

Categories

Tech |