Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“தொகுதியை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வேன்”… காரைக்குடியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரச்சாரம்..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாங்குடி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது அவர் பேசுகையில், எனக்கு போட்டியாக யாரும் இருப்பதாக நான் எண்ணம் இல்லை. எனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. காரைக்குடியில் மகளிருக்கென தனியாக ஒரு அரசு கல்லூரியை ஏற்படுத்துவேன். மேலும் நீண்ட நாள் கோரிக்கையான சட்டக் கல்லூரியையும் ஏற்படுத்துவேன்.

நெசவு தொழிலை ஊக்குவிப்பேன். சாலைகளை சீரமைத்து கொடுப்பேன். செட்டிநாட்டு உணவு வகைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வழிவகை செய்து கொடுப்பேன். சேமிப்பு கிடங்குகள், நெல் கொள்முதல் நிலையம் அமைக்க ஏற்பாடு செய்வேன். வேலைவாய்ப்பை அதிக படுத்துவேன். குடிநீருக்கு ஆதாரமான சம்பை ஊற்று பகுதியை பாதுகாப்பேன் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்து காரைக்குடி சட்டமன்ற தொகுதியை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வேன் என்று அவர் பேசினார்.

Categories

Tech |