இன்று தமிழகம் வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக முதல்வர், துணை முதல்வர் சந்திக்க இருக்கின்றனர்.
அதிமுக பாஜக இடையே கூட்டணி தொடர்பான நிலை என்பது இன்று நிச்சயமாக எடுப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. தொகுதி பங்கீடு உள்ளிட்ட விவரங்கள் தொடர்பாக சந்தித்து பேசுவதற்கு வாய்ப்பு உள்ளது. எத்தனை தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி வருகிற சட்டமன்ற தேர்தலில் கொடுக்கலாம். போட்டியிட விருப்பமுள்ள தொகுதிகளை நிச்சயமாக அமித்ஷா தமிழக முதலமைச்சரிடமும், துணை முதலமைச்சரிடமும் தெரிவிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக தான் பார்க்க முடிகிறது.
அதிமுக பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணியை பார்த்தோமென்றால் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் அமைந்திருந்தது. அப்போது 5 நாடாளுமன்ற தொகுதிகள் பாரதி ஜனதா கட்சிக்கு அதிமுக தலைமையிலான கூட்டணியில் ஒதுக்கப்பட்டன. இந்நிலையில் சட்டமன்ற பொதுத் தேர்தலை பொறுத்தவரை எத்தனை தொகுதிகள் பாரதிய ஜனதா கட்சிக்கு ஒதுக்கப்படும் என்ற பல்வேறு எதிர்ப்புகள் அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே இருக்கிறது.
அதிமுகவை பொறுத்தவரை எத்தனை தொகுதிகளை விட்டுக் கொடுக்க போகிறது ? உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இந்த சந்திப்பில் பேச வாய்ப்புகள் உள்ளது. இது முதல்கட்ட பேச்சுவார்த்தையாகத்தான் இருக்கும் என சொல்லப்படுகின்றது.