தொகுதி பங்கீடுவதில் பாஜக மற்றும் அதிமுகவினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஒவ்வொரு கட்சியினரும் ஒருவர் குறை கூறிக்கொண்டு விமர்சனம் செய்து பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குறித்த நிலமும் தொகுதி பங்கீட்டில் இழுபறியும் நீட்டித்து வருகிறது. இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் கோவை தெற்கு பகுதியை பாஜகவுக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்து கட்சி அலுவலகத்தில் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை தெற்கு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கிய நிலையில் அதிமுக அம்மன் அர்ஜுனனுக்கு மீண்டும் ஒதுக்க கோரி அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.தொகுதியை விட்டு தந்தால் நிர்வாகிகள் அனைவரும் ராஜினாமா செய்வோம் என்று கூறியுள்ளனர். ஆனால் ஒதுக்கப்பட்ட தொகுதியில் மீண்டும் தர முடியாது என பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.