தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் தனது சிறுவயது புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில ஆண்டுகளாக தொகுப்பாளராக கலக்கி வருபவர் மாகாபா ஆனந்த். இவர் நிகழ்ச்சிகளை மிக கலகலப்பாகவும், காமெடியாகவும் தொகுத்து வழங்கி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார். தற்போது இவர் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை, சூப்பர் சிங்கர் போன்ற சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் மகாபா ஆனந்துக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பாலோயர்கள் உள்ளனர் .
இவர் அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் தனது சிறுவயது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில் ஒரு புகைப்படத்தில் மாகாபா ஆனந்த் பெண் குழந்தை போல வேடமிட்டிருக்கிறார். ரசிகர்களை கவர்ந்த இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.