தொகுப்பாளர் ரக்சன் ‘அது இது எது’ நிகழ்ச்சியில் பெண் வேடமிட்டு நடித்துள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது .
விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளர் ரக்சன் முதன் முதலில் கலக்கப்போவது யாரு சீசன் 5 நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகமானார். இதையடுத்து பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் . மேலும் இவர் நடிகர் துல்கர் சல்மானுடன் இணைந்து கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்து அசத்தி இருந்தார் . தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கி வருகிறார் .
இதுவரை ரக்சனுக்கு திருமணம் நடைபெறவில்லை என பலரும் நினைத்துக் கொண்டிருந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் முதல் முறையாக தனக்கு திருமணம் முடிந்து ஒரு குழந்தை இருப்பதை ரக்சன் அறிவித்தார் . இந்நிலையில் ரக்சன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த அது இது எது நிகழ்ச்சியில் பெண் வேடமிட்டு நடித்த புகைப்படம் வெளியாகியுள்ளது . இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர் .