ரக்ஷன் விஜய் டிவியில் ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான தொகுப்பாளராக வலம் வருபவர் ரக்சன். இவர் ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமானார். இதனையடுத்து, கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி, ஜோடி போன்ற நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றியதன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.
மேலும், இவர் ”கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். இந்நிலையில், இவர் விஜய் டிவியில் ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவர் ஒரு எபிசோடுக்கு 1 லட்சம் சம்பளம் வாங்குவதாக தகவல் தெரிவிக்கின்றனர்.