Categories
சினிமா தமிழ் சினிமா

தொகுப்பாளினி டிடியின் கியூட் நடனம்… லைக்குகளை குவிக்கும் வீடியோ…!!!

தொகுப்பாளினி டிடி நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக தொகுப்பாளினியாக கலக்கி வருபவர் டிடி (திவ்யதர்ஷினி). இவர் காபி வித் டிடி, அன்புடன் டிடி, ஜோடி நம்பர் ஒன், என்கிட்டே மோதாதே போன்ற பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை கலகலப்பாக தொகுத்து வழங்கி ரசிகர்களை கவர்ந்தார். மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் டிடி அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/CSmLxewFaAC/

சமீபத்தில் நடிகை நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சியை டிடி சிறப்பாக தொகுத்து வழங்கியிருந்தார். இந்நிலையில் டிடி கியூட்டாக நடனமாடிய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ‘ஷோவும் நல்லா வந்துச்சு, இந்த ரீலும் நல்லா வந்துச்சு, அதனால இப்போ இது இன்ஸ்டாக்கு வந்துச்சு’ என பதிவிட்டுள்ளார். தற்போது ரசிகர்களை கவர்ந்த இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |