Categories
சினிமா தமிழ் சினிமா

தொகுப்பாளினி நக்ஷத்திராவுக்கு திருமணம் முடிந்துவிட்டதா?… வெளியான புகைப்படம்… குழப்பத்தில் ரசிகர்கள்…!!!

தொகுப்பாளினி நக்ஷத்திரா தனது சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு விளக்கமளித்துள்ளார்.

சன் தொலைக்காட்சியில் பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமடைந்தவர் நக்ஷத்திரா . இவர் வாயை மூடி பேசவும், சேட்டை உள்ளிட்ட சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார் . மேலும் இவர் சில குறும் படங்களிலும் நடித்துள்ளார். இதையடுத்து இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லக்ஷ்மி ஸ்டோர்ஸ் சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தார் . இந்த சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. சமீபத்தில் நக்ஷத்திரா ராகவ் என்பவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து இவர்களது நிச்சயதார்த்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது .

anchor nakshatra nagesh clarifies about her marriage confusions raghav

இந்நிலையில் நக்ஷத்ரா தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது ரசிகர்களின் கேள்விக்கு விளக்கமளித்துள்ளார். அதில் ரசிகர் ஒருவர் ‘சில புகைப்படங்களை பார்த்து உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டது என குழம்பிப் போனேன். உண்மையிலேயே உங்களுக்கு திருமணம் முடிந்து விட்டதா ?’ என கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்த நக்ஷத்திரா ‘பலரும் அப்படித்தான் நினைத்துள்ளனர், ஆனால் அந்த புகைப்படங்கள் என் நிச்சயதார்த்தத்தில் எடுக்கப்பட்டவை’ எனக் கூறியுள்ளார் .

Categories

Tech |