தொகுப்பாளினி பிரியங்கா தனது அம்மாவுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது .
விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வரும் பிரியங்காவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் முதன்முதலில் சுட்டி டிவியில் தான் தொகுப்பாளினியாக அறிமுகமானார். இதையடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒல்லி பெல்லி நிகழ்ச்சியை ஈரோடு மகேஷுடன் இணைந்து தொகுத்து வழங்கினார்.
இதைத் தொடர்ந்து இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை மிக கலகலப்பாக தொகுத்து வழங்கி பிரபலமடைந்தார். தற்போது இவர் சூப்பர் சிங்கர் 8, ஸ்டார் மியூசிக் உள்ளிட்ட பல விஜய் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் பிரியங்கா தனது அம்மாவுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது . தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது .