குஜராத் மோர்பியில் தொங்கு பாலம் உடைந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “குஜராத் மோர்பியில் தொங்கு பாலம் அறுந்த விபத்தில் பல அப்பாவி உயிர்கள் பலியாகியிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய விரும்புகிறேன். அதேவேளையில் விபத்தில் சிக்கி காணாமல் போனவர்களை விரைவில் பத்திரமாக மீட்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.