Categories
மாநில செய்திகள்

தொடக்கக்கல்வித்துறை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு?…. வலுக்கும் கோரிக்கை….!!!!

தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் உயர்நீதிமன்ற உத்தரவின்படி முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அதாவது பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலருக்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் “சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் தொடக்கக்கல்வி இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வருகின்றனர்.

தொடக்கக்கல்வித்துறை தவிர கள்ளர் சீரமைப்பு மற்றும் மாநகராட்சிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும், ஆதிதிராவிடர் நலத்துறை, பள்ளிக்கல்வித்துறை பட்டதாரி ஆசிரியர்களுக்கும் கல்வி தகுதி அடிப்படையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தொடக்கக்கல்வித்துறையில் தேர்ச்சி பெற்று பல வருடங்களாக ஆசிரியர் பணி அனுபவம் கொண்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு மறுக்கப்பட்டு வருகிறது.

ஆனால் கடந்த 2021-ஆம் ஆண்டில் பிப்ரவரி மாதம் 12-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வில் தொடக்கக்கல்வித்துறை பட்டதாரி ஆசிரியர்களுக்கு 5 சதவீதம் உள்ஒதுக்கீடு செய்து தீர்ப்பு வழங்கியது. எனவே மேல்நிலை கல்வி சார்நிலைப் பணி சிறப்பு விதிகளில் உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி உரிய திருத்தங்கள் செய்து தொடக்கக்கல்வித்துறை பட்டதாரி ஆசிரியர்களுக்கும் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் பள்ளிக்கல்வித்துறை பட்டதாரி ஆசிரியர்களுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது” என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |