தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள தொடக்க கல்வி பட்டயத் தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள தொடக்க கல்வி பட்டயத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தோடு ஏற்கனவே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்களை இணைக்க வேண்டும்.
பின்னர் தேர்வர்கள் வசிக்கும் மாவட்டத்துக்கு பக்கத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலமாக ஜூன் 28 ஆம் தேதி முதல் ஜூலை 7ஆம் தேதி வரையிலான நாட்களில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். ஜூன்28 தவிர மற்ற நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.