Categories
மாநில செய்திகள்

தொடக்கப் பள்ளிகளில் ‘Smart Class’…. அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன சூப்பர் தகவல்….!!!!

அனைத்து தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் வசதி ஏற்படுத்தப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

சட்டப்பேரவையில் இன்று தமிழகத்தின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசினார். அப்போது தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 47 லட்சத்திலிருந்து 53 லட்சமாக அதிகரித்துள்ளது. இல்லம் தேடி கல்வித்திட்டம் ஆறுமாதம் நீட்டிக்கப்பட உள்ளது. அனைத்து தொடக்கப் பள்ளிகளில், ஸ்மார்ட் கிளாஸ் வசதி ஏற்படுத்தப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் 0.70 சதவீதமாகவும், நடுநிலை கல்வியில் 1.30 சதவீதமாகவும், இடைநிலைக் கல்வியில் 3.30 சதவீதமாகவும் உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் ஏற்படுத்த உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளது. அனைவரிடத்திலும் வரவேற்பை பெற்றுள்ளது.

Categories

Tech |