தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கின் காரணமாக பள்ளிகள் திறக்கப்பட்டு 9, 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்களும் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தொடக்க பள்ளிகள் திறப்பது குறித்து 8ஆம் தேதிக்கு பிறகு முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.