தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராவதற்கான தகவலை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் இயங்கி வரும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக சேருவதற்கு தேவையான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றது. எனவே தேவை இருக்கும் விவசாயி அனைவரும் தங்களுடைய பகுதி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களை தொடர்பு கொண்டு விண்ணப்ப படிவங்களை பெற்று கொள்ளலாம். அந்த விண்ணப்ப படிவத்தில் விவசாயிகள் தங்கள் முழு விவரங்களை நிரப்பி, தங்களது பாஸ்போர்ட் அளவு போட்டோ, ஆதார் அட்டை, பான் கார்டு போன்றவற்றுடன் பங்குத்தொகை 100 ரூபாய் மற்றும் நுழைவு கட்டணம் 10 ரூபாய் ஆகியவற்றுடன் நீங்கள் குடியிருக்கும் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு நேரில் சென்று வழங்கி உறுப்பினராகி கொள்ளலாம்.
இவ்வாறு நேரில் செல்ல முடியாதவர்கள் தபால் மூலம் அனுப்பி வைக்கலாம். ஆனால் தபால் மூலமாக விண்ணப்பத்தை அனுப்பும் போது முழுமையாக நிரப்பப்பட்ட விண்ணப்பத்துடன் மேலே குறிப்பிட்ட ஆவணங்களை இணைத்து, பங்குத்தொகை மற்றும் நுழைவுக்கட்டணத்தை அஞ்சலக பண அஞ்சல் மூலமாக செலுத்தி அதன் ரசீது எண், செலுத்தப்பட்ட அலுவலகத்தின் பெயர், முகவரி போன்றவற்றை குறிப்பிட்டு சங்கத்தின் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். எனவே விவசாயிகள், மக்கள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினராகி அதன் சேவைகளை பெற்று தங்களுடைய வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ளலாம். இதுகுறித்த தகவலினை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திலீப்குமார் தெரிவித்துள்ளார்.