Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தொடங்கப்படவுள்ள ஆக்சிஜன் தயாரிக்கும் பணி… பலகட்ட ஆய்விற்கு பிறகு… ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் பலகட்ட ஆய்வுக்கு பின் ஆக்சிஜன் தயாரிக்கும் பணி தொடங்கவுள்ளது.

இந்தியா முழுவதும் உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் தயாரிக்க சுப்ரிம் கோர்ட் கடந்த மாதம் 27ஆம் தேதி தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனையடுத்து தமிழக அரசு கடந்த 29ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை திறக்க அரசாணையை பிறப்பித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு அதிகாரிகளும் நேரில் ஆய்வு செய்து ஸ்டெர்லைட் வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் நிலையத்தை இயக்க அனுமதியும் வழங்கியுள்ளார். தற்போது ஸ்டெர்லைட் வளாகத்திற்குள் மின் இணைப்பை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பல கட்ட ஆய்வுக்கு பிறகு ஆக்சிஜன் தயாரிக்கும் பணி தொடங்கப்படவுள்ளது. இதன் மூலம் ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்ய முடியும் எனவும், கொரோனா நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |