மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக அடுத்து ஒரு ஆண்டிற்கு கோடம்பாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
சென்னை, கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் பவர்ஹவுஸ் முதல் 80 அடி சாலை வரை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக செப்டம்பர் 14 முதல் ஒரு வருடத்திற்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக போக்குவரத்துத் துறை நேற்று அறிவித்திருந்தது. அதன்படி இன்று முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் மார்க்கத்திலிருந்து போரூர் கோயம்பேடு நோக்கி ஆற்காடு செல்லும் சாலை வாகனங்கள் பவர் ஹவுஸ் சந்திப்பு வரை சென்று இடது புறம் திரும்பி அம்பேத்கர் சாலையில், அசோக் நகர் காவல் நிலையம் வரை சென்று, வலது புறம் திரும்பி 2வது அவென்யூ சாலை வழியாக 100 அடி சாலை சந்திப்பு வரை சென்று நேராக P.T. ராஜன் சாலை, ராஜ மன்னார் சாலை, 80 அடி சாலை, வன்னியர் சாலை வழியாக ஆற்காடு சாலையை சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைதொடர்ந்து, கோடம்பாக்கம் மேம்பாலத்தில் இருந்து வடபழனி சந்திப்பை நோக்கி செல்லும் வாகனங்கள் முதலில் பவர் ஹவுஸ் சந்திப்பு வரை சென்று இடதுபுறம் திரும்பி அம்பேத்கார் சாலையில் அசோக் நகர் காவல் நிலையம் வரை சென்று வலதுபுறம் திரும்பி 2- வது அவென்யூ சாலை, 100 அடி சாலை வழியாக சென்று வடபழனி சந்திப்பு செல்லலாம். இந்த போக்குவரத்து மாற்றம் ஒரு வருடத்திற்கு தொடரும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.