இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று கணிசமாக குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் பரவத் தொடங்கி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்த வைரஸ் இந்தியாவிலும் அதிகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மாநில அரசுகள் தேவைப்பட்டால் ஊரடங்கு அமல்படுத்தி கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி பல்வேறு மாநிலங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதுமட்டுமில்லாமல் பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா வைரஸ் அதிகரித்து வருகிறது . இதனால் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவை அம்மாநில அரசு விதித்துள்ளது. மேலும் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பயிற்சி மையங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூடியுள்ளது. இந்த உத்தரவு வருகின்ற ஜனவரி 15ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.